J.A. George / 2023 ஜனவரி 25 , பி.ப. 01:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெஹிவளை - கல்கிசை மாநகர சபையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலேயே தமது வேட்பாளர்கள் போட்டியிடுவதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
எனவே, அங்கு தனித்து போட்டியிடும் வகையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் தம்மால் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போலியான முறையில் வேட்பு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளமை தமக்கு தெரியவந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனது போலியான கையெழுத்துடன், குறித்த வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தெஹிவளை - கல்கிசை மாநகர சபைக்கான வேட்பு மனுவொன்றில் தனது போலி கையெழுத்திட்ட ஆவணம் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார் #SLnews #Lka #TamilNews #TamilMirror pic.twitter.com/PIVEPWAZ0S
— Tamil Mirror (@Tamilmirror) January 25, 2023
23 Oct 2025
23 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Oct 2025
23 Oct 2025