2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

யாழ். பல்கலைகழக மாணவர்கள் 9 பேர் மீட்பு

Editorial   / 2020 ஜூலை 16 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன் 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின்  வைத்தியத்துறை மாணவர்கள் 9 பேர், நேற்று (15) நண்பகல் வேளையில் உடையார்கட்டு  வனப்பகுதிக்கு சென்ற நிலையில் காணாமல் போயிருந்தனர்

அதனை தொடர்ந்து குறித்த விடயம் தொடர்பில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டது.

 அதனையடுத்து, பொலிஸார் மற்றும் இராணுவத்தினர், வனவள  திணைக்கள அதிகாரிகள்  இணைந்து தேடுதல் நடத்தினர்.

இதில், நடத்திய தேடுதலின் போது அவர்கள் முத்தையன்கட்டு கொய்யாகுளம்  பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்  

இதனையடுத்து, ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு, அவர்கள் எதற்காக வன பகுதிக்குச் சென்றார்கள்  உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .