Lenin Raj / 2026 மே 15 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
நிலவும் சீரற்ற காலநிலையைக் கருத்தில் கொண்டு இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக ஹட்டன் வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.
மாணவர்களின் பாதுகாப்பினை முன்னிறுத்தி இந்த அவசரத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பாடசாலைகளில் நடைபெறவிருந்த நிகழ்ச்சிகள் மற்றும் மேலதிக வகுப்புகளை நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொகவந்தலாவை, நோர்வூட், புளியாவத்தை மற்றும் வட்டவளை ஆகிய பாடசாலைகளில் நடைபெறவிருந்த தமிழ் தினப் போட்டிகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், மாணவர்களை எந்தவொரு காரணத்திற்காகவும் பாடசாலைக்கு அழைப்பதைத் தவிர்க்குமாறு ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
43 minute ago
56 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
56 minute ago
3 hours ago