Lenin Raj / 2026 மார்ச் 27 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
விசித்திரத் தாவரங்களை (Ornamental Plants) சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்த இலங்கை பயணி ஒருவர், இன்று (27) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டியை சேர்ந்த 57 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட குறித்த தாவரங்களின் பெறுமதி இரண்டு இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இவர் இன்று அதிகாலை 12:30 மணியளவில் தாய்லாந்தின் பேங்கொக் நகரில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் UL-405 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை குறித்த பயணி வந்தடைந்துள்ளார்.
தனது பயணப்பொதிக்குள் காகிதங்களால் சுற்றப்பட்ட நிலையில் இந்தத் தாவரங்களை மறைத்து வைத்து, விமான நிலையத்தின் எதனையும் அறிவிக்கத் தேவையில்லை எனக் கருதப்படும் "பசுமை வழி" (Green Channel) ஊடாக வெளியேற முயன்ற போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தத் தாவரங்களை இலங்கைக்குக் கொண்டு வருவதற்குத் தேவையான முறையான இறக்குமதி அனுமதிப்பத்திரம் அல்லது தாவர சுகாதாரப் பாதுகாப்பு சான்றிதழ் எதனையும் அவர் பெற்றிருக்கவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொண்டு வரப்பட்ட தாவரத் தொகுதி சுங்கத்தினால் அரசுடமையாக்கப்பட்டது.
இத்தாவரங்கள் மூலம் நாட்டிற்குள் ஏற்படக்கூடிய உயிரியல் பாதிப்புகளைத் தவிர்ப்பதற்காக, அவற்றை அழிக்கும் நோக்குடன் கட்டுநாயக்க தாவர தனிமைப்படுத்தல் நிலையத்திடம் (Plant Quarantine Office) ஒப்படைக்கப்பட்டுள்ளன.
7 minute ago
42 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
42 minute ago
53 minute ago
1 hours ago