Mayu / 2026 ஏப்ரல் 01 , பி.ப. 01:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை (2025) பெறுபேறுகளின்படி, கணிதப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தெய்வேந்திரன் திருக்குமரன் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
வெளியாகியுள்ள பெறுபேறுகளின் அடிப்படையில், குறித்த மாணவன் 2.9400 Z-புள்ளி (Z-Score) பெற்று அகில இலங்கை ரீதியாக முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
தனது வரலாற்றுச் சாதனை குறித்து இன்று (01) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த திருக்குமரன், "கல்வியை ஒரு சுமையாகக் கருதாமல், விருப்பத்துடன் கற்றுக்கொண்டால் எதனையும் சாதிப்பது மிகவும் எளிதான விடயம். திட்டமிட்ட உழைப்பும், தளராத முயற்சியுமே என்னை இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளது."
என குறிப்பிட்டார்
8 minute ago
43 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
43 minute ago
54 minute ago
1 hours ago