Editorial / 2020 செப்டெம்பர் 28 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ராஜ்
ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (28) வடக்கு - கிழக்கில் அழைப்பு விடுக்கப்பட்ட ஹர்த்தாலுக்கு யாழ்ப்பாணம் மக்கள் பூரண ஆதரவினை வழங்கியுள்ளார்கள்.
இன்றைய தினம் ஹர்த்தாலினால் யாழ்ப்பாண நகரம் முற்றாக முடங்கியது. யாழ்ப்பாணத்தில் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்லவில்லை. பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன பொதுமக்கள் வீதிகளில் பயணிக்கவில்லை.
அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து சேவைகளும் இன்றைய தினம் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.
10 தமிழ்க் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து, தற்போதைய அரசினால் மேற்கொள்ளப்படும் தமிழ் மக்கள் மீதான அடாவடித்தனத்துக்கு ஜனநாயக ரீதியில் எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அந்த அழைப்பபுக்கு தமிழ் மக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்கி தமிழ் மக்கள் தமது ஆதரவினை அளித்துள்ளார்கள்.
எனினும் நேற்றைய தினத்திலிருந்து அரசஆதரவாளர்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பினரால் இன்றைய ஹர்த்தாலினை குழப்புவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எனினும், தமிழ் மக்கள் ஹத்தாலுக்கு பூரண ஆதரவை வழங்கி உள்ளதை அவதானிக்க கூடியதாக உள்ளது.
44 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago