2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கையடக்க தொலைபேசி ஒலி எழுப்பியதற்காக 1000 ரூபா தண்டம்

Kogilavani   / 2013 நவம்பர் 12 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

நீதிமன்ற விசாரணையின்போது நீதிமன்றத்தினுள் கையடக்க தொலைபேசி ஒலி எழுப்பிய குற்றத்திற்காக நபர் ஒருவருக்கு 1000 ரூபா தண்டப்பணம் விதித்து கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.யூட்சன் இன்று செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார்.

நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்த கல்முனைக்குடியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கே இவ்வாறு தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.

குறித்த நபர் தண்டப்பணத்தை செலுத்த தவறும் பட்சத்தில் ஒரு மாத கால சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டுமெனவும் நீதவான் இதன்போது உத்தரவிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .