2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

அட்டாளைச்சேனைப் பிரதேச சபையின் 2013ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றம்

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 26 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)

 
அட்டாளைச்சேனைப் பிரதேச சபையின் 2013ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 06 வாக்குகளாலும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 02 வாக்குகளாலும் மொத்தம் 08 வாக்குகளால் ஏகமனதாக இன்று புதன்கிழமை நிறைவேறியது.
 
அட்டாளைச்சேனைப் பிரதேச சபையின் 2013ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்ட அறிக்கை தவிசாளர் எம்.ஏ.அன்ஸில் அவர்களினால் இன்று சபையில் முன்வைக்கப்பட்டது.
 
இன்றைய வரவு - செலவுத்திட்ட அமர்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 06 உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 02 உறுப்பினர்களும் பிரசன்னமாகி இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
 
தவிசாளர் அவர்களினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத்திட்ட அறிக்கையின் பிரகாரம் 2013ஆம் ஆண்டுக்கான உத்தேச வரவாக 15 கோடி 26 இலட்சத்து 65 ஆயிரத்து 990 ரூபா எனவும் உத்தேச செலவாக 15 கோடி 26 இலட்சத்து 63 ஆயிரத்து 175 எனவும் தெரிவிக்கப்பட்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X