2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பொத்துவில் பிரதேசத்தில் 350 மில்லியன் செலவில் அபிவிருத்திகள்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 08 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


பொத்துவில் பிரதேசத்தில் 350 மில்லியன் ரூபா செலவில் வீதிகளும், நீர்ப்பாசன திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவை விரைவில் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

பொத்துவில் பிரதேசத்தில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டம் திங்கட்கிழமை (7) பொத்துவில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை,  'மிக விரைவில் செம்மணிக்குளம் அபிவிருத்தி, நாவலாறு மற்றும் நெல்லிக்கணத்தை அணைக்கட்டுகள், துவ்வையாறு தஹறாம்பளை வீதி அபிவிருத்தி, பாலம் அமைத்தல், ஜெய்கா கிராம அபிவிருத்தி திட்டம் போன்றன ஆரம்பிக்கபடவுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .