Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 மே 24 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சுபுன் டயஸ்)
நிந்தவூர் கிராமிய அபிவிருத்தி வங்கியில் போலி தங்கச் சங்கிலி, தங்க மோதிரம், என்பவற்றை அடகு வைத்து 17 லட்சம் ரூபா மேசாடி செய்த பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நிந்துவூர் பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட இவர், 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை வரை 22 தடவைகள் மோசடி செயல்களில் ஈடுபட்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
நிந்தவூர் கிராமிய வங்கியின் முகாமையாளர் குறித்த பெண் அடகுவைத்த நகைகளில் சந்தேகம் கொண்டு பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து மேற்படி பெண் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரசாந்த ஜெயக்கொடி தெரிவித்தார்.
சந்தேக நபர் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார். சம்மாந்துறை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
3 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago