Super User / 2011 பெப்ரவரி 06 , மு.ப. 09:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சி.அன்சார்)
அம்பாறை மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் இன்று வரை 64,690 குடும்பங்களைச் சேர்ந்த 247,950 பேர் பாதிக்கப்பட்டள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.
இதேவேளை, 4,503 குடும்பங்களைச் சேர்ந்த 17,250 பேர் இடம்பெயர்ந்து 73 நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர்.
243 வீடுகள் முழுமையாகவும் 1,679 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதுடன் நான்கு பேர் உயிரிழந்துள்ள நிலையில் இரண்டு பேர் காணாமல் போயுள்ளனர்.
165,500 ஏக்கர் வயற் காணிகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக மாவட்ட கமநல சேவைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.
அம்பாறை மாவட்டத்தில் தற்போது மழை ஓய்ந்து வானம் மப்பும் மந்தாரமாகவும் காணப்படுகின்றது.
29 minute ago
40 minute ago
44 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
40 minute ago
44 minute ago
56 minute ago