2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

நீதிமன்றத்தை அவமதித்தவருக்கு 3 மாத கடூழிய சிறை

Super User   / 2013 நவம்பர் 07 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

நீதிமன்றத்தை அவமதித்த நபருக்கு மூன்று மாத கால கடூழிய சிறைத்தண்டனையும் 1500 ரூபா தண்டப் பணமும் கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.யூட்சனினால் நேற்று புதன்கிழமை விதிக்கப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கே இந்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வாகன அனுமதிப்பத்திரமின்றி வாகனத்தை செலுத்திய குற்றத்திற்காக நீதிமன்றத்தில் ஆஜராகினார்.

இதன்போது குறித்த நபரின் அணிந்திருந்த சேர்ட்டின் மேல் பொத்தான் திறந்து காணப்பட்டுள்ளது. இதனை அவதானித்த சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் பொலிஸார் அதனை பூட்டுமாறு கூறிய போது அவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

இதனாலே குறித்த நபருக்கு மூன்று மாத கால கடூழிய சிறைத்தண்டனையும் 1500 ரூபா தண்டப் பணமும் கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதியினால் விதிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0

  • ibnuaboo Friday, 08 November 2013 10:17 AM

    ஆனால் அன்று அந்த கல் வீசியவர்களுக்கு...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .