Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை
A.P.Mathan / 2011 பெப்ரவரி 03 , பி.ப. 07:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.எம்.ஜெஸ்மின்)
ஹிமிதுராவயிலிருந்து அம்பாறை நோக்கி வந்த பஸ் வண்டியொன்று உகன - ஹிமிதுராவ வீதியில் பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 42பேர் படுகாயமுற்ற நிலையில் அம்பாறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அம்பாறையிலுள்ள ஆடை தொழிற்சாலையொன்றில் தொழில்புரியும் யுவதிகளை ஏற்றிக்கொண்டு வந்த இந்த பஸ் வண்டி, எதிரில் சைக்கிள் ஒன்றில் பலத்த மழைக்கு மத்தியில் குடை பிடித்துக் கொண்டு வந்த ஒருவருக்கு வழிவிடுவதற்காக ஓரங்கட்டியவேளையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
நேற்று காலை இடம்பெற்ற இவ்விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை அம்பாறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
1 hours ago
2 hours ago