Menaka Mookandi / 2011 ஜனவரி 27 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சி.அன்சார்)
அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு 164 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இவற்றில் ஐந்து அரசியல் கட்சிகளினதும் 48 சுயேட்சை குழுக்களினதும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
சம்மாந்துறை பிரதேச சபைக்கு இலங்கை தமிழரசு கட்சியினால் தாக்கல் செய்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ள அதேவேளை, ஈழவர் ஜனநாயக முன்னணியினால் (ஈரோஸ்) காரைதீவு, திருக்கோவில் மற்றும் ஆளையடிவேம்பு போன்ற பிரதேச சபைகளில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களும் தெஹியத்தகண்டியில் ஜனசெத்த பெரமுனவினால் தாக்கல் செய்த மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அக்கரைப்பற்று மாநகர சபை, அம்பாறை நகர சபை, சம்மாந்துறை, பொத்துவில், அட்டாளைச்சேனை, நிந்தவூர், இறக்காமம், அக்கரைப்பற்று, திருக்கோவில், நாவிதன்வெளி, ஆலையடிவேம்பு, காரைதீவு, தெஹியத்தகண்டிய, பதியத்தலாவ, மகாஓயா, தமன, நாமல்ஓயா, உகண மற்றும் லகுகல ஆகிய பிரதேச சபைகளுக்களுக்கான தேர்தலில் 182 உறுப்பினர்கள் தெரிவு செய்ய அங்கரிக்கப்பட்ட ஏழு அரசியல் கட்சிகளும், 100ற்கும் மேற்பட்ட சுயேட்சைக் குழுக்களும் களமிரங்கியுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சி மாவட்டத்தில் 19 உள்ளுராட்சி மன்றங்களும், அக்கரைப்பற்று மாநகர சபை, அக்கரைப்பற்று பிரதேச சபை தவிர்ந்த அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி போட்டியிடுகின்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அக்கரைப்பற்று மாநகர சபை, அக்கரைப்பற்று, சம்மாந்துறை, பொத்துவில், அட்டாளைச்சேனை, நிந்தவூர், இறக்காமம், நாவிதன்வெளி, காரைதீவு ஆகிய பிரதேச சபைகளுக்கும், தேசிய காங்கிரஸ் அக்கரைப்பற்று மாநகர சபை மற்றும் அக்கரைப்பற்று பிரதேச சபை அகியவற்றில் போட்டியிடுகின்றது.
இலங்கை தமிழரசுக் கட்சி பொத்துவில், திருக்கோவில், நாவிதன்வெளி, ஆலையடிவேம்பு, காரைதீவு ஆகிய பிரதேச சபைகளிலும், மக்கள் விடுதலை முன்னணி அம்பாறை நகர சபை, சம்மாந்துறை, இறக்காமம், தெஹியத்தகண்டிய, பதியத்தலாவ, மகாஓயா, தமன, நாமல்ஓயா, உகண மற்றும் லகுகல ஆகிய பிரதேச சபைகளுக்கும் போட்டியிடுகின்றது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி நாவிதன் வெளி, திருக்கோவில், ஆலையடிவேம்பு மற்றும் காரைதீவு ஆகிய பிரதேச சபைகளுக்கும் போட்டியிடுகின்றது.
இன்று நடைபெற்ற வேட்புமனுத் தாக்கலின் போது சிரேஷ்ட அமைச்சர் பீ.தயாரட்ன, நாடாளுமன்ற உறுப்பினர்களான பைஸால் காசீம், எச்.எம்.எம்.ஹரீஸ், ஸ்ரீயாணி விஜேவிக்கிரம, அனோமா கமகே, கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை, மாகாண சபை உறுப்பினர்களான தயா கமகே, எம்.எல்.ஏ.அமீர், புஷ்பராஜா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஏ.எம்.எம்.நௌஷாத், சந்திரகாந்தன் உட்பட வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
29 minute ago
40 minute ago
44 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
40 minute ago
44 minute ago
56 minute ago