Suganthini Ratnam / 2017 மார்ச் 03 , மு.ப. 09:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
அட்டாளைச்சேனையில் கடந்த ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் 23 பேர் டெங்கு நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்தியதிகாரி ஏ.எல்.அலாவுதீன் தெரிவித்தார்.
டெங்கு நோயை கட்டுப்படுத்துவது தொடர்பாக விழிப்புணர்வுக் கருத்தரங்கு இன்று வெள்ளிக்கிழமை (03) சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், 'அட்டாளைச்சேனையில் கடந்த வருடத்தை விட இவ்வருடம் 02 மாதங்களுக்குள்; டெங்கு நோய் தாக்கம் திடீர் என அதிகரித்துக் காணப்படுகின்றது.இது தொடர்பாக பொது மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.
அட்டாளைச்சேனையில் நுளம்புகள் பரவக் கூடிய வகையில் வெற்றுக் காணிகளை வைத்திருப்பவர்களுக்கு எதிராக நீதிமன்றினூடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அத்துடன் நுளம்புகள் பரவக்கூடிய விதத்தில்; இடங்களை வைத்திருப்பவர்களுக்கு அதே இடத்தில் அபராதம் விதிப்பதற்கு சுகாதார அமைச்சினால் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது' என்றார்.
35 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
2 hours ago
3 hours ago