Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Suganthini Ratnam / 2017 பெப்ரவரி 23 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
இலங்கையில் அதிகளவான பெண்கள் மார்பகப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி, அலுவலக மேற்பார்வை குடும்பநல உத்தியோகத்தர் புஸ்பமலர் சிறிதரன் தெரிவித்தார்.
உலக புற்றுநோய் தினத்தையிட்டு இன்று(23) அட்டாளைச்சேனை, கோணவத்தை கிராமிய சுகாதார நிலையத்தில் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'பெண்கள் மார்பக மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய்களுக்கு ஆளாகி வருகின்றார்கள்.
இதனை நேர காலத்துடன் கண்டுபிடித்து சிகிச்சை அளிப்பதன் மூலம் இந்த நோய் பரவாமல் தடுக்க முடியும்.
அரசாங்கத்தினால் நாடு பூராகவும் சிகிச்சை நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு மார்பக மற்றும் கர்ப்பப்பை புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றது' என்றார்.
மேலும், அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்தில் மாதத்தின் நான்காவது வெள்ளி மற்றும் பிரதி சனிக்கிழமை தோறும் மார்பக மற்றும் கர்ப்பப்பை பரிசோதனை இடம்பெறுகின்றது. 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இச்சிகிச்சை நிலையத்துக்குச்; சென்று தங்களை பரிசோதிக்க முடியும் எனவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
01 May 2025
01 May 2025