2025 மே 01, வியாழக்கிழமை

'அம்பாறையில் தமிழர் பிரதேசங்களில் நில அபகரிப்பு தொடர்ச்சியாக இடம்பெறுகின்றது'

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 03 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்  

யுத்த காலத்தை விட நில அபகரிப்பும் ஆக்கிரமிப்பும் தொடர்ச்சியாக அம்பாறை மாவட்டத்தில் தமிழர் பிரதேசங்களில் தற்போது மேற்கொள்ளப்படுகின்றது. பொத்துவில், கல்முனை உள்ளிட்ட  பிரதேசங்களிலேயே இச்செயற்பாடு அதிகமாகக் காணப்படுகின்றது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று ஜொலிபோய்ஸ் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில், ஆலையடிவேம்பு தர்மசங்கரி மைதானத்தில்  ஞாயிற்றுக்கிழமை  (3) நடைபெற்ற மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின்  இறுதிப் போட்டியில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது, 'குறிப்பாக, தமிழர்களின் பூர்வீக நிலங்கள் மற்றும்  ஆலயங்களுக்குச் சொந்தமான காணிகளை அபகரிக்கும் நோக்கில் சிலர் முழுமூச்சுடன் செயற்படுகின்றனர். இச்செயற்பாடு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதுடன், அதற்காக அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழர்கள் ஒன்றுசேர்ந்து செயற்பட வேண்டும். அவ்வாறு ஒன்றுசேர்ந்து செயற்பட்டால் மாத்திரமே அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழர்களின் நிலங்களைக் காப்பாற்ற முடியும்' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .