Suganthini Ratnam / 2017 மார்ச் 30 , மு.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
இலங்கை ஜனநாயகமிக்க வளர்ச்சி அடைந்த நாடு என்று கூறப்பட்டாலும், இங்கு அரசியல் காலாசாரம் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுவது ஆபத்தான விடயம் என மனித உரிமைகள் ஆணைக் குழுவின் கல்முனைப் பிராந்திய இணைப்பாளர் ஏ.எல்.இஸ்ஜடீன் தெரிவித்தார்.
அரசியலில் பெண்களின் பங்களிப்பு மற்றும் வாக்களிக்கும் உரிமை தொடர்பில் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில்; அட்டாளைச்சேனை ஒஸ்ரா மண்டபத்தில்; புதன்கிழமை (29) மாலை நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, 'இந்த நாட்டில் ஆரோக்கியமான அரசியல் கலாசாரம் பேணப்பட வேண்டும். நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தலை நடத்துவதன் மூலம் ஜனநாயகத்தை மேலோங்கச் செய்ய முடியும்.
இலங்கை அரசியல் அமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள வகையில் இன, மத, மொழி, பால் ரீதியாக எந்தவொரு பாகுபாட்டையும் காட்ட முடியாது. சட்டத்தின் முன் சகலரும்; சமம், சட்டத்தின் சமனான பாதுகாப்புக்கு உரித்துடையவர்கள் என்று கூறப்படுகின்றது.
நாட்டில் வாக்களிக்கும் உரிமை கொண்டவர்கள் தங்களின் வாக்குகளைப் பயன்படுத்தி சிறந்த ஜனநாயக நாட்டையும் சிறந்த அரசியல் கலாசாரத்தையும் உருவாக்குவதற்கு எவ்வாறு தங்களின் வாக்குப்; பலத்தை பிரயோகிக்க வேண்டும் என்பது தொடர்பில் மக்கள் மத்தியில் கொண்டுசெல்ல வேண்டிய பொறுப்பு ஊடகவியலாளர்களிடம் காணப்படுகின்றது.
இந்த நாட்டின் அடிப்படை உரிமை, இறைமை என்பன மக்களின் கைகளிலேயே காணப்படுகின்றது.
இதன் மூலம் தாம் தெரிவுசெய்யும் அரசியல் தலைவர்கள் ஊழல் மோசடி மற்றும் வன்முறைகளில் ஈடுபடாதவர்களாக முன்மாதிரியானவர்களாக இருக்க வேண்டும். அப்போதே சிறந்த அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்த முடியும்;' என்றார்.
54 minute ago
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
25 Jan 2026
25 Jan 2026