2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

'கிழக்கு மாகாண மக்கள் அமையம்;' உருவாக்கம்

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 26 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

கிழக்கு மாகாணத்திலுள்ள மக்களின் இருப்பைப் பாதுகாக்கும் நோக்கில் 'கிழக்கு மாகாண மக்கள் அமையம்;' கடந்த வாரம் உருவாக்கப்பட்டுள்ளது என மேற்படி அமையத்தின் இணைச் செயலாளர், சட்டத்தரணி எம்.எம்.பஹ்ஜ், இன்று (26)  தெரிவித்தார்.

இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மாணிக்கமடு, மாயக்கல்லிமலை விவகாரம் மற்றும் கிழக்கு மாகாணத்தில் பூர்வீக நிலங்களை பாதுகாத்தல் தொடர்பாக சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட விடயங்களை இந்த அமையம்  கவனத்திற்கொள்ளும் எனவும் அவர் கூறினார்.

இனங்களுக்கு இடையில் திட்டமிட்டு உருவாக்கப்படும் மோதல்களை தொலைநோக்குப் பார்வையோடு, அறிவுபூர்வமாக எதிர்கொள்வதற்கு சட்டத்தரணிகளின் வழிகாட்டல் அவசியமாகிறது.

எனவே, அம்பாறையிலுள்ள  சட்டத்தரணிகள் மற்றும் புத்திஜீவிகளின் ஒத்துழைப்பை இந்த அமையம் கோருகின்றது எனவும் அவர் கூறினார்.

இந்த அமையத்தின் ஒன்றுகூடல் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளதால், மாயக்கல்லிமலை விவகாரம் தொடர்பாக விவாதிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .