Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2017 மே 01 , மு.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வ.துசாந்தன்
தொழிலாளர்களின் பிரச்சினைகளை முதன்மைப்படுத்தி தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டங்கள் அல்லாமல், இந்த நாட்டிலுள்ள அரசியல் கட்சிகளானது தமது கட்சிகளின் ஸ்திரத்தன்மையை அதிகரிப்பதற்காக போட்டி போட்டுக்கு கொண்டு மே தினக் கூட்டங்களை நடத்தியுள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.
அனைத்து தொழிற்சங்கங்களின் ஏற்பாட்டில் கல்முனை நகரில் இன்று நடைபெற்ற மே தினக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது, 'பலரை அழித்து சிலரை வாழ வைப்போம் என்ற கொள்கையே நாட்டை ஆண்ட அரசியல் தலைவர்களாலும் அரசியல் தலைமைகளாலும் கைக்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் விவசாயம் செய்துவந்த விவசாயிகள் 36 ஆயிரம் பேர் அத்தொழிலை இழந்திருக்கின்றனர். இவர்களைப் பற்றி யாரும் சிந்திப்பதில்லை. இவ்வாறு தொழில் இழந்த விவசாயிகளுக்கு மாற்றுத் தொழில் வழங்கும் செயற்றிட்டம் முன்னெடுக்கவில்லை.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வனவளத்தை பாதுகாத்துக்கொண்டும் வன ஜீவராசிகளை வளர்த்துக்கொண்டும் இருந்த 6,500க்கும் மேற்பட்ட பண்ணையாளர்களின் காணிகள் எல்லைப்படுத்தப்படுகின்றது என்ற போர்வையில் காடுகளிலே வசித்த பண்ணையாளர்கள் வெளியேற்றப்படுகின்றனர். இதனால் வாழ்வா? சாவா? என்ற நிலையில் அம்மக்கள் நடுத்தெருவில் நிற்கின்றனர்.
மட்டக்களப்பில் சீமெந்து கல்வெட்டு தொழிற்சாலை கொண்டுவரப்பட்டுள்ளது. தொழிற்சாலை கொண்டுவந்துள்ளமை சரியானது. ஆனால், இதன் மூலம் 15 பேருக்கும் குறைவானர்களுக்கே தொழில்வாய்ப்பு கிடைக்கும். காரணம் அங்கு இயந்திரங்கள் மூலமே வேலைகள் நடைபெறவுள்ளன. இதனால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 4,800 செங்கல் உற்பத்தி தொழிலை பாரம்பரியமாக செய்துவருகின்ற செங்கல் உற்பத்தியாளர்கள் நடுத்தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் இயங்கிய 20க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இவற்றினை திறப்பதற்கு நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற ஆட்சியாளர்களும் செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை. இவ்வாறு ஒவ்வொரு தொழில்களிலும் தொழிலாளர்கள் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
5 hours ago
7 hours ago
9 hours ago