2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

கல்முனையில் மே தின நிகழ்வு

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 27 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா

இலங்கை மகா ஆசிரியர் சங்கத்தின் ஒருங்கிணைப்பில் பல்வேறு தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள மே தின நிகழ்வு, எதிர்வரும் முதலாம் திகதி கல்முனை நகரில் நடைபெறும் என அச்சங்கத்தின் தலைவர் ஏ.எம்.அஹுவர் தெரிவித்தார்.

அன்றையதினம் காலை எட்டு மணிக்கு கல்முனை தரவைப் பிள்ளையார் கோவில் சந்தியிலிருந்து மே தின ஊர்வலம் ஆரம்பமாகி, கல்முனை ஐக்கிய சதுக்கத்தில் பொதுக்கூட்டமும் பிரகடன நிகழ்வும் நடைபெறவுள்ளன.

இதில் அனைத்து முகாமைத்துவ உதவியாளர்கள் சங்கம், சம்மாந்துறை வலய ஆசிரியர் சங்கம், அம்பாறை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம், இலங்கை அரசாங்க பொதுச் சேவைகள் சங்கம், கிராம உத்தியோகத்தர் சங்கம், முச்சக்கரவண்டி ஓட்டுனர்கள் சங்கம், விவசாய மற்றும் மீனவர் சங்கங்கள் ஆகியவற்றின் உறுப்பினர்கள்; பங்குபற்றவுள்ளனர்.

அத்துடன், பிராந்திய அரசியல் தலைமைகளும் சிவில் சமூகப் பிரமுகர்களும் இந்நிகழ்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .