2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

‘சமுர்த்தி வங்கிகளை தரப்படுத்த நடவடிக்கை’

Niroshini   / 2017 மார்ச் 02 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

நாடெங்கிலுமுள்ள சமுர்த்தி வங்கிகளை தரப்படுத்துவதற்கு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமுர்த்தி வங்கிகளின் வடக்கு, கிழக்கு இணைப்பாளர் ஐ.அலியார், இன்று தெரிவித்தார்.

“இதற்கமைய, நாடெங்கிலுமுள்ள 1,074 சமுர்த்தி வங்கிகளும் மாவட்ட ரீதியாக வகைப்படுத்தப்படவுள்ளது. சமுர்த்தி வங்கிகளின் நிதிச் செயற்பாடுகள், சுற்றாடல் நடவடிக்கைகள் வாடிக்கையாளர்களுக்கான சேவைகள், கடன் வசதிகள் என்பவற்றின் நடவடிக்கைகள் தொடர்பாக புள்ளி இடப்பட்டு ஏ,பி.சீ,டி என தரப்படுத்தப்படவுள்ளது.

இத்தரப்படுத்தலுக்கமைய, சமுர்த்தி வங்கிகளின் செயற்பாடுகள் நவீனமயப்படுத்தப்பட்டு எதிர்காலத்தில் விஸ்தரிக்கபடவுள்ளது” எனவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .