Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Niroshini / 2017 மார்ச் 18 , மு.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கார்த்திகேசு
“தமிழ் மக்களுக்கு நிரந்தரமான தீர்வு ஒன்று கிடைக்க வேண்டுமென்றால் ஐ.நா சபையின் பொறிமுறைகளுக்கமைவான நீதி விசாரணைக்குழு இலங்கையில் அமைக்கப்படுவது காலத்தின் கட்டாயம். அப்போதுதான் அநீதி இழைக்கப்பட்ட மக்களின் அழுகுரலுக்கு, நிரந்தர நீதியை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன் தெரிவித்தார்.
திருக்கோவில் பிரதேசத்தில் தம்பட்டை இலெவன் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த கிரிகெட் சுற்றுப்போட்டியின் இறுநாள் நிகழ்வு, நேற்று நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“இந்த நாட்டு ஆட்சியாளர்களிடமிருந்து மூன்று தசாப்பங்களுக்கு மேலாக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஒரு நிரந்தர தீர்வு திட்டம் கிடைப்பெறாத இந்நிலையில், சர்வதேசம் சரியான நிலையில் இருந்து செயற்பட வேண்டிய கட்டாயத் தேவைப்பாடு தமிழர்களால் உணரப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் தொடர்ச்சியான காயங்கள்,கண்ணீருக்கு நிரந்தர தீர்வுகள் கிடைக்க வேண்டும். அதற்கு ஐ.நா.சபையினால் அமைக்கப்படுகின்ற சர்வதேச விசாரணைக்குழு இலங்கையில் அமைக்கப்ட வேண்டும். அப்படி அமைக்கப்படுகின்ற போதுதான் உண்மையான,நீதியான நிலையான தீர்வை நாங்கள் எட்டமுடியும். அவ்வாறு இல்லாதவிடத்து, நீதி கோரி நிற்கும் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்படகின்ற ஒரு விடயமாகத்தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
01 May 2025
01 May 2025