2025 மே 01, வியாழக்கிழமை

'தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கல்முனை நகரக் கிளைக் காரியாலயம் இடம் மாறாது'

Suganthini Ratnam   / 2017 மே 08 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கல்முனை நகரக் கிளைக் காரியாலயத்தை அம்பாறை நகருக்கு இடமாற்றுவதற்கான நடவடிக்கை ஒருபோதும் எடுக்கப்பட மாட்டாது என்று வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தன்னிடம் உறுதியளித்துள்ளார் என விளையாட்டுத்துறைப் பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், இன்று தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது,'கல்முனையில் நீண்டகாலமாக இயங்கி வருகின்ற தேசிய வீடமைப்பு அதிகார சபையின் காரியாலயத்தை மூடும் வகையில், குறித்த காரியாலய முகாமையாளருக்கு பதவி உயர்வு வழங்கி இடமாற்றம் செய்திருப்பதாகவும் அதனைத் தொடர்ந்து, அக்காரியாலயத்தை அம்பாறை நகருக்கு இடமாற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இணையத்தளங்களிலும் பேஸ்புக்கிலும்  செய்திகள் வெளிவந்துள்ளன.

இது தொடர்பில் அமைச்சர் சஜித் பிரேமதாஸவை தான் தொடர்புகொண்டு வினவியபோது, அவர் அதனை முற்றாக மறுதலித்தார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர், இந்த நாட்டில் மிகவும் பொறுப்பு வாய்ந்த அரசியல் தலைவராக இருப்பதுடன்,  சிறுபான்மையின மக்களை அரவணைப்பவராக தான் இருப்பதாகவும் கல்முனையில் இயங்குகின்ற குறித்த அலுவலகத்தை ஒருபோதும் மூடுவதற்கு எண்ணிப் பார்க்கவில்லை என்றும் அலுவலர்கள் இடமாற்றம், பதவி உயர்வு என்பன சாதாரணமான விடயம் என்றும் கூறினார்.

அத்துடன், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கல்முனைக் கிளைக் காரியாலயத்திலிருந்து பதவி உயர்வு பெற்றுச் சென்றுள்ள முகாமையாளருக்குப் பதிலாகப்  புதிய  முகாமையாளரை மிக விரைவில் நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன், குறித்த கிளைக் காரியாலயத்தை வலுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கையை  எடுப்பதாகவும் அமைச்சர் என்னிடம் உறுதியளித்துள்ளார்.

அமைச்சர் சஜித் பிரேமதாச இவ்வாறு உறுதியளித்துள்ளதால், இந்த விடயம் தொடர்பில் மக்கள் குழப்பம் அடையத் தேவையில்லை' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .