Suganthini Ratnam / 2017 மே 09 , மு.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கார்த்திகேசு
தமிழ் மக்கள் இழந்தவைகளை மீண்டும் பெற வேண்டுமென்றால் அவர்கள் தங்களின் பிள்ளைகளின் கல்வியை உயர்த்துவதன் ஊடாக நிலை நிறுத்தக் கூடியதாக அமையும் என திருக்கோவில் வலயக்கல்வி பணிமனையின் கல்வி அபிவிருத்தியின் பிரதி கல்வி பணிப்பாளர் வி.குணாலன் தெரிவித்துள்ளார்.
அம்பாறை திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை(09)இடம்பெற்ற சித்திரைப் புத்தாண்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்படி கருத்தினை தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், "இன்று தமிழ்ச் சமூகம் கலாசார பாரம்பரியங்களில் இருந்து விலகிச் செல்லுவதனை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. நாம் இன்று வாழ்கின்ற வாழ்கை முறைகள் எமது மூதாதையர்கள் கற்றுக் கொடுத்தவைகள்.அவைகள் குழந்தைகளின் ஊடாக அடுத்த சந்ததிகளுக்கு சிறப்பாக எடுத்துச் செல்ல வேண்டும். தற்போது கிடைத்துள்ள சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி இன்றைய தலைமுறைகள் நாளைய தலைமுறைகளுக்காக பாடுபட வேண்டியுள்ளது. இதனை தவறவிடும் சந்தர்ப்பத்தில் எதிர்காலத்தில் பாரிய பின்னடைவுகளை நாம் எல்லோரும் சந்திக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைகள் தோன்றலாம்.
இதனை தடுத்து சிறப்பான சமூகத்தினை கட்டியெழுப்ப அதிபர்,ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர். இதற்கு எல்லாப் பெற்றோர்களின் ஒத்துழைப்பும் அவசியமாக இருக்கின்றது.நாம் இழந்தவைகளை மீண்டும் பெற்றுக் கொள்ள வேண்டுமென்றால் கல்வியில் எமது சமூகம் உயர்வு பெற வேண்டும். வாழ்கையில் நாம் செய்கின்ற ஒவ்வொரு தியாகத்துக்கும் பலன் உண்டு. எனவே சமூகமும் நாமும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டுமென்றால் நமது குழந்தைகளை கல்வியிலும்,கலாசாரத்திலும் ஈடுபடுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026