Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2017 மே 01 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார்
'இனப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வையும் எமது மக்களின் உரிமைகளை வழங்கக்கூடிய சமஷ்டி முறையிலான அரசியல் யாப்பையும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம்' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
கடந்தகால கசப்பான உணர்வுகளை யாவரும் மறந்து அனைத்துத் தமிழர்களும் ஒன்றிணைந்து எமது உன்னத நோக்கத்துக்காக பாடுபட முன்வரவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
அக்கரைப்பற்றில் இன்று நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, 'இலங்கையில் இனப் பிரச்சினைத் தீர்வுக்காக கட்டமைப்பு ரீதியான அரசியல் யாப்பு மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதில் முழு இலங்கைத்தீவின் மக்களும் ஏகோபித்த ரீதியில் கட்சி மத வேறுபாடுகளை கடந்து சிந்திக்க முன்வந்துள்ளார்கள். இது எமது போராளிகளுக்கும் ஜனநாயகத்தின் மீது பற்றுவைத்து தன்னை முழுமையாக அர்ப்பணித்து தமது நிலைப்பாட்டில் தளராமல் எங்கள் அனைவரையும் வழிநடத்தும் எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு கிடைத்திருக்கும் மாபெரும் வெற்றியாகவே நான் கருதுகின்றேன்.
அம்;பாறை மாவட்டத்தில் பூர்வீகக் குடிகளான தமிழ் மக்களின் அளப்பரிய விட்டுக்கொடுப்புகளையும் போராட்டகால பங்களிப்பையும் அவர்களது அர்ப்பணிப்பையும் யாரும் குறைத்து எடைபோட நினைக்கக்கூடாது.
தமிழ் மக்களின் உண்மையான உரிமைக் கோரிக்கைகள், தியாகங்கள், இழப்புகள் சிக்காக்கோ தொழிலாளர்களின் அர்ப்பணிப்பிலும் மேலானது. சிறுபான்மையினம் என்ற காரணத்தினால் மாத்திரம் உரிமைகள் மறுக்கப்பட்டுக் கிடக்கின்றோம்.
யுத்தத்தில் பதிக்கப்பட்ட மக்களுக்கு சரியாக நட்டஈடு வழங்கப்படவில்லை. முன்னாள் போராளிகள் மற்றும் மற்றும் அவர்களின் குடும்பங்கள் இன்றய வாழ்க்கைச் சுமையை சமாளிப்பதற்கு அன்றாடம் மிகவும் கஷ்டப்படுகின்றார்கள். அவர்களுக்கான நலத்திட்டங்கள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை, அரசியல் கைதிகள் தங்களின் குடும்பங்களுடன் இணைந்து வாழ்வதற்கு அவர்களை உடனடியாக விடுதலை செய்வதற்கு அரசாங்கம் ஆவன செய்யவேண்டும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
9 hours ago
30 Apr 2025