Thipaan / 2017 மே 19 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
நிந்தவூர், காரைதீவு மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களில், டெங்கு நுளம்பு பெருகக் கூடிய வகையில் இடங்களை வைத்திருந்த 82 பேருக்கு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக, சம்மாந்துறை பொலிஸ் நிலைய சுற்றுச் சூழல் பாதுகாப்பு பொறுப்பதிகாரி எம்.எஸ். அப்துல் மஜீட் தெரிவித்தார்.
பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார் மற்றும் பிரதேச சபை என்பன இணைந்து இன்று (19) டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் மேற்கொண்டதாக அவர் கூறினார்.
இப்பரிசோதனையின் போதே, டெங்கு நுளம்பு பெருகக் கூடிய வகையில் இடங்களை வைத்திருந்த 82 நபர்களுக்கு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளவர்கள், தமது காணிகளை 03 நாட்களுக்குள் துப்புரவு செய்ய வேண்டுமெனவும், தவறும் பட்சத்தில் இவர்களுக்கெதிராக நீதிமன்றினூடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் கூறினார்.
இன்றைய தினம் சுமார் 800 இடங்கள் பரிசோதிக்கப்பட்டதாகவும், வீடு வீடாகச் சென்று டெங்கு நோய் தொடர்பாக துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் கூறினார்.
இதேவேளை டெங்கு நுளம்பு பரவக் கூடிய வகையில் இடங்களை வைத்திருந்த 03 நபர்களுக்கெதிராக சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், இவ் வழக்கு விசாரணை எதிர்வரும் 22ஆம் திகதி எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
29 minute ago
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026