2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

'பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்குவதாகக் கூறிய அரசாங்கம் ஏமாற்றுகின்றது'

Suganthini Ratnam   / 2017 பெப்ரவரி 22 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

பத்தாயிரம் பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம், கிழக்கு மாகாணப் பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்காமல் தொடர்ந்து ஏமாற்றி வருவதாக உலமா கட்சியின் தலைவர் அஷ்ஷெய்க் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

உலமாக் கட்சியின் கல்முனை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21) இரவு நடைபெற்ற கலந்துரையாடலின்போதே,  அவர் இதனைக் கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்தபோது, 'நாட்டில் தற்போது வேலையில்லாப் பட்டதாரிகளின் எண்ணிக்கை  அதிகரித்துள்ளது. வேலைவாய்ப்பு உள்ள பகுதிகளில் அரசியல்வாதிகள் பணம் வாங்கிக்கொண்டு தகுதியற்றவர்களை நியமிப்பதாகவும் முறைப்பாடுகள் உள்ளன.

கிழக்கு மாகாணத்திலும்; பாரிய  எண்ணிக்கையிலான பட்டதாரிகள் வேலையில்லாப் பிரச்சினையை எதிர்நோக்குகின்றார்கள். அவர்களுக்கு படித்துவிட்டு ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

எனவே, போட்டிப் பரீட்சை நடத்துவதை விடுத்து, நாட்டிலுள்ள அனைத்து வேலையில்லாப் பட்டதாரிகளுக்கும் வயது மூப்பின் அடிப்படையில் முன்னுரிமை வழங்கி வேலைவாய்ப்பு வழங்குவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .