2025 மே 02, வெள்ளிக்கிழமை

'பட்டதாரிப் பயிலுநர்களாக சேவையில் இணைக்கவும்'

Niroshini   / 2017 மார்ச் 02 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

'வேலையற்ற பட்டதாரிகள், மிக நீண்ட நாட்களாக போராட்டத்தில் குதித்துள்ளதால், அவர்களுடைய உடல் நிலைமை மோசமடைவதற்கு முன்னர், வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொடுக்கும் ஒரு நிகழ்ச்சி நிரலை முன்வைக்க வேண்டும். இல்லையேல், அவர்களைப் பட்டதாரிப் பயிலுநர்களாக இணைத்து, அந்தப் பணியை செய்யவைக்குமாறு, பிரதமர் மற்றும் நிதி அமைச்சரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளேன்' என, கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துக் கருத்துரைத்த அவர் கூறியதாவது,

'எங்களிடத்தில் இருந்து பிரிந்து சென்றவர்கள் தான், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் போட்டியாளர்களாகவும் வேட்பாளர்களாகவும், போராளிகளாகவும் இருக்கின்றனர்.

இதைக்கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். காரணம், கல்குடாவின் அரசியல் களம் மாத்திரமல்ல, கிழக்கு மாகாணத்தின் அரசியல் களத்தையும் மிக விரைவிலே புறட்டிப்போடுகின்ற ஒரு சதுரங்க விளையாட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று, அவர்களுக்குத் தெரியாது. வாக்களிப்பதற்கு வெளியூரும் அபிவிருத்திக்கு உள்ளுரும் என்ற கருத்தில், அரசியல் செய்யக்கூடாது.

மட்டக்களப்பு மாவட்டப் பட்டதாரிகள், போராட்டத்தில் குதித்துள்ளனர். இவ்விடயமாக, பிரதமரின் கவனத்துக்கு எழுத்து மூலமாக வழங்கியதுடன், பட்டதாரிகளின் பிரச்சினையை அவசரமாக முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென்று, பிரதமருடனும் நிதியமைச்சருடனும் கலந்துரையாடினேன்.

இப்பிரச்சினை தொடர்பான நல்ல முடிவொன்றை, அவர்கள் விரைவில் எடுப்பார்கள்' என்று அவர் நம்பிக்கை வெளியிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .