Suganthini Ratnam / 2017 மே 02 , மு.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா, எம்.எஸ்.எம்.நூர்தீன்
அம்பாறை, இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாணிக்கமடு, மாயக்கல்லிமலைப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் ஆக்கிரமிப்புத் தொடர்பில் அரசாங்கம் உரிய தீர்வை உடனடியாக வழங்காவிடின், ஐக்கிய நாடுகள் சபையில் இப்பிரச்சினையை முன்வைப்பதற்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி நடவடிக்கை எடுக்கும் என அம்முன்னணியின் தவிசாளர் எம்.எம்.அப்துல் றஹ்மான் தெரிவித்தார்.
மாயக்கல்லிமலைப் பிரதேசத்துக்கு திங்கட்கிழமை (1) நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினர் விஜயம் செய்தனர்.
இதனை அடுத்து, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினருக்கும் இறக்காமம் பிரதேச முக்கியஸ்தர்களுக்கும் இடையிலான சந்திப்பு, அங்கு நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மாயக்கல்லிமலைப் பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவத்தால் சிறுபான்மையின மக்கள் அச்சமடைந்துள்ளதுடன், நல்லாட்சி அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கை இழந்து வருகின்றனர்.
எனவே, இப்பிரச்சினை தொடர்பில் அரசாங்கமும் பொலிஸாரும் சட்டத்தையும் நீதியையும் உரிய முறையில் கடைப்பிடித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு வழங்க முன்வர வேண்டும்.
இப்பிரச்சினைக்கு ஆரம்பத்தில் தீர்வு வழங்காவிடின் பிற்காலத்தில் பாரிய இனவிரிசலை ஏற்படுத்தும் என்பதுடன், இன நல்லிணக்கத்துக்கு பாதிப்பாக அமையும் எனவும் அவர் கூறினார்.
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026