Administrator / 2016 ஒக்டோபர் 28 , மு.ப. 08:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கனகராசா சரவணன்
அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் 17 வயதுச் சிறுமி ஒருவரை 40 வயதுடைய மந்திரவாதி ஒருவர்; மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்ற சம்பவம் நேற்றுமுன்தினம் புதன்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை இந்தச் சிறுமி காதலித்து வந்துள்ளார். இது தொடர்பில் பெற்றோருக்கு தெரியவரவே, சிறுமியைக் கண்டித்ததுடன், சிறுமியின் காதலை முறிப்பதற்காக மட்டக்களப்பு, திமிலைதீவிலுள்ள மந்திரவாதி ஒருவரிடம் சிறுமியை பெற்றோர் அழைத்துச்சென்றுள்ளனர்.
சிறுமியின் காதலைப் பிரிப்பதற்காக மந்திரவாதியும் மந்திர தந்திரங்கள் மேற்கொண்டு பரிகாரங்கள் செய்துவந்துள்ளார். நேற்றுமுன்தினம் புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் குறித்த சிறுமியின் வீட்டுக்குச் சென்ற மந்திரவாதி, சிறுமியின் தாயார் சமையல் அறையில் இருந்தபோது, சிறுமியை மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்றுள்ளதாகவும் குறித்த மந்திரவாதி 40 வயதுடையவர் எனவும் திருமணம் முடித்து விவாகரத்து பெற்றவர் எனவும் பொலிஸாரிடம் நேற்று வியாழக்கிழமை பெற்றோர் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இந்தச் சிறுமியை தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
1 hours ago
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
7 hours ago