2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

“மருதமுனை, நற்பிட்டிமுனை திவிநெகும பயனாளிகளுக்கு கொடுப்பனவு”

Niroshini   / 2015 செப்டெம்பர் 23 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா,பி.எம்.எம்.ஏ.காதர்

கல்முனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட மருதமுனை மற்றும் நற்பிட்டிமுனை கிராமங்களைச் சேர்ந்த திவிநெகும பயனாளிகளுக்கு கடந்த மூன்று மாதங்களாக வழங்கப்படாமல் இருந்து வந்த மாதாந்த திவிநெகும உதவிக் கொடுப்பனவு இன்று புதன்கிழமை தொடக்கம் நிலுவையுடன் வழங்கப்பட்டு வருவதாக கல்முனை மாநகர சபை உறுப்பினர் இசட்.ஏ.எச்.ரஹ்மான் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;,

இவ்விடயம் தொடர்பில்,நேற்று செவ்வாய்க்கிழமை அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் திவிநெகும திணைக்களத்தின் மாவட்ட உதவி ஆணையாளர் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு சென்றேன்.

மருதமுனை மற்றும் நற்பிட்டிமுனை கிராமங்களைச் சேர்ந்த 3015 குடும்பங்கள் திவிநெகும பயனாளி குடும்பங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

இக் குடும்பங்களுக்கு மாதாந்த உதவிக் கொடுப்பனவு அந்தந்த மாதம் இவ்வங்கிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தும் அது பயனாளிகளுக்கு விநியோகிக்கப்படாமல் நிலுவையாக இருந்து வருவதாகவும் இதனால் அதனை நம்பி வாழ்கின்ற பயனாளிகள் கஷ்டங்களை எதிர்நோக்கியிருப்பதாகவும் சுட்டிக்காட்டினேன்.

இதனைக் கவனத்தில் கொண்ட அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் திவிநெகும திணைக்களத்தின் மாவட்ட உதவி ஆணையாளர் ஆகியோர் உரிய அதிகாரிகளுக்கு இது தொடர்பில் பணிப்புரை விடுத்ததன் பேரில் இன்று புதன்கிழமை தொடக்கம் குறித்த கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றது என்றார்.

இவ்விடையம் தொடர்பாக மருதமுனை-நற்பிட்டிமுனை திவிநெகும சமுதாய அடிப்படை வங்கியின் முகாமையாளர் எம்.எம்.எம்.முபீன் கூறுகையில்,
திவிநெகும பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் அந்தந்த மாதமே பயனாளிகளின் கணக்கு்கு வரவு வைக்கப்படுகின்றது .சிலர் அந்த மாதமே பணத்தை மிளப் பெறுகின்றார்கள் சிலர் அடுத்த மாதத்துடன் சேர்த்துப் பெறுகின்றார்கள். கடன் பெற்றவர்கள் கடனில் கழித்து விடுகின்றார்கள். பணத்தை மீளப் பெறாதவர்களுக்கான கொடுப்பனவு கடந்த 6ஆம்,7ஆம்,8ஆம் மாதங்களுடன் இம் மாதக் கொடுப்பனவுடன் நான்கு மாதங்களுக்கான கொடுப்பனவுகள் தற்போது வழங்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X