2025 மே 01, வியாழக்கிழமை

'வாக்குகளை எதிர்பாராமல் பொத்துவிலில் அபிவிருத்திகளை முன்னெடுத்துள்ளோம்'

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 16 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

பொத்துவில் பிரதேச மக்களின் வாக்குகளை எதிர்பாராமல், அப்பிரதேச மக்கள் நீண்டகாலம் நன்மை அடையக்கூடிய வகையில் அபிவிருத்தித் திட்டங்களை தேசிய காங்கிரஸ் கட்சி மூலமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது எனக் கிழக்கு மாகாண சபையின்  எதிர்க்கட்சித் தலைவரும் மேற்படி கட்சியின் அமைப்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

பொத்துவில் துவ்வை ஆற்றை அகலப்படுத்தி, சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் இன்று (16) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தேசிய காங்கிரஸிடம் அரசியல் அதிகாரம் இருக்கும்வரையில் பொத்துவில் பிரதேச மக்களின் முக்கியமான துறைகளுக்கு முக்கியத்துவம் வழங்கி  அபிவிருத்திகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .