2025 மே 02, வெள்ளிக்கிழமை

வியாபார நிலையம் தீக்கிரை

Kogilavani   / 2017 மார்ச் 24 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கார்த்திகேசு, வி.சுகிர்தகுமார்

திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில்-01 பிரதான வீதியில்  அமைந்துள்ள வியாபார நிலையமொன்று,  இன்று(24) அதிகாலை, தீக்கிரையாகியுள்ளதாக  திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

தீவிபத்தினால் சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் மேலும் கூறினர்.

தம்பிலுவிலைச் சேர்ந்த சின்னத்தம்பி  கோபாலபிள்ளை என்பவரின்  வியாபார நிலையமே, இவ்வாறு எரிந்து நாசமகியுள்ளது.

மின் ஒழுக்கே, தீ விபத்துக்கு  காரணமாக இருக்கலாமென பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .