Princiya Dixci / 2017 மே 06 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.சுகிர்தகுமார்
அம்பாறை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாச்சிக்குடா பிரதேசத்தில் 14 வயதுடைய மாணவன் ஒருவன், நேற்று (05) இரவு வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட மாணவன், அக்கரைப்பற்று பாடசாலையொன்றில் தரம் 9இல் கல்வி பயிலும் தமிழ்ச்செல்வன் ஜெசிகரன் எனத் தெரிய வருகின்றது.
பாடசாலை வகுப்பில் சக மாணவனின் கைக்கடிகாரம் தொலைந்தமை தொடர்பில் குறித்த மாணவன் மீது சந்தேகிக்கப்பட்டமையை அடுத்து, மாணவன், தற்கொலை செய்துகொண்டுள்ளாரென, சந்தேகிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில், அம்பாறை விசேட தடவியல் பொலிஸாரும் அக்கரைப்பற்று பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அக்கரைப்பற்று மாவட்ட வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026