Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Princiya Dixci / 2021 மே 17 , பி.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எல்.எஸ்.டீன், பாறுக் ஷிஹான்
நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் 19 நிலைமையைக் கருத்திற்கொண்டு, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் பணிப்பின் பேரில், “10 நாட்களுக்குள் 10,000 கட்டில்கள் அமைக்கும் செயற்திட்டம்”, தேசிய இளைஞர்கள் கழக சம்மேளனத்திடம் ஒப்படைக்கப்பட்டு, நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதன்படி, அக்கரைப்பற்று இளைஞர் கழக சம்மேளனத்தால் 10 கட்டில்கள் தயாரிக்கப்பட்டு, அவை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன.
இதற்காக தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் 50,000 ரூபாய் நிதியுதவியுடனும் ஏனைய நிதிகள், தனவந்தர்கள் மற்றும் இளைஞர்களின் பங்களிப்போடு தயாரிக்கப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் கொரோனா தொற்றாளர்களுக்காகத் தயார் செய்யப்படும் வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன என அக்கரைப்பற்று பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் பிரதித் தலைவர் தில்ஷான் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
52 minute ago
04 Jul 2025