Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 பெப்ரவரி 27 , பி.ப. 12:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.விஜயரெத்தினம், ஜவ்பர்கான்
மட்டக்களப்பு - கொம்மாதுறை தீவுப் பகுதியில் கடந்த 20 நாட்களாக சிசிச்சையளிக்கப்பட்டு வந்த காட்டுயானை, சிசிச்சை பலனின்றி இன்று திங்கட்கிழமை (27) அதிகாலை இறந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றார்கள்.
செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொம்மாதுறை தீவுப் பகுதியில் காட்டுயானை ஒன்று, கால் ஒன்றில் ஏற்பட்ட சூட்டுக் காயம் காரணமாக நடக்க முடியாமல் கீழே விழுந்து, தன்னுடைய உணவுத் தேவைக்காகவும் உயிருக்கும் போராடிது.
காலில் துப்பாக்கி சூடு பட்டுள்ளதால் எலும்பு உடைந்திருந்ததாக என அம்பாறை வனஜீவராசிகள் திணைக்களத்தின் வைத்தியர் நிஹால் புஷ்பகுமார தெரிவித்தார்.
இதனையடுத்து, அம்பாறை மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களத்தின் வைத்தியர் குழாமினர், காயப்பட்ட காட்டு யானைக்கு முறையான சிசிச்சை அளித்து வந்தனர்.
எனினும், குறித்த யானை இன்று இறந்துள்ளது. (N)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .