Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 20 , மு.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கே.சரவணன்)
அக்கரைப்பற்று கிழக்கு மற்றும் தம்பிலுவில் விவசாய திணைக்கள பிரிவுகளில் கிழக்கு மாகாண விவசாய திணைக்களம் "நாம் பயிரிடுவோம் தேசத்தை கட்டியெழுப்புவோம்" எனும் திட்டத்தின் கீழ் 04 விவசாயிகளுக்கு 220 கிலோ விதை வெங்காயங்களை திணைக்கள காரியாலயங்களில் வழங்கி வைக்கப்பட்டுள்ளதென அக்கரைப்பற்று கிழக்கு விவசாய திணைக்கள போதனாசிரியர் திருமதி.தர்சினி ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
இத்திட்டத்தின் கீழுள்ள அக்கரைப்பற்று கிழக்கு விவசாய பிரிவுகளிலுள்ள இரு விவசாயிகளுக்கு விதை உற்பத்தி திட்டத்தின் கீழ் மானிய அடிப்படையில் 110 கிலோ விதை வெங்காயத்தையும் விவசாய போதனாசிரியர் திருமதி.ரவிச்சந்திரனும் தம்பிலுவில் விவசாய பிரிவிலுள்ள 110 கிலோ விதை வெங்காயத்தை போதனாசிரியர் எம்.கோகுல்ராஜ் ஆகியோர் தமது காரியாலயங்களில் விவசாயிகளுக்கு இன்று காலை வழங்கி வைத்தனர்.
இவ்விதை உற்பத்தி வெங்காயத்தை மானிய அடிப்படையில் பெறும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் வெங்காயத்திலிருந்து மீண்டும் மானிய அடிப்படையில் பெற்ற விதைகளை விவசாய திணைக்களத்திற்கு வழங்க வேண்டும் எனவும் இம் மானிய அடிப்படையிலான விதைகளை முதல் கட்டமாக வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago