Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 நவம்பர் 07 , மு.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
கல்முனைக்குடி பிரதேசத்தின் பிரதான வீதியில் அமைந்துள்ள மீன் சந்தையின் சுற்றுப்புறத்தில் கழிவுப் பொருட்கள் வீசப்பட்டுள்ளதுடன், அங்கு அசுத்த நீர் தேங்கியுள்ளதாலும், அப்பகுதியில் மோசமான சுகாதார அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள மீன் வியாபாரிகளும், பொதுமக்களும் விசனம் தெரிவித்தனர்.
இப்பகுதியில் தேங்கியுள்ள அசுத்த நீரிலிருந்து நுளம்புகள் உருவாகுவதனால் பகல் வேளையிலும் தாம் நுளம்புக் கடிக்குள்ளாவதாகவும் இதனால், டெங்கு போன்ற நோய்கள் ஏற்படக் கூடிய அபாயமுள்ளதாகவும் மீன் வியாபாரிகள் குறிப்பிட்டனர்.
மேலும், இப்பகுதியில் வீசப்படும் கழிவுப் பொருட்களிலிருந்து வரும் கொசுக்கள், தாம் விற்பனை செய்கின்ற மீன்களில் நோய்க் காவிகளை பரப்பிவிடக்கூடிய அபாயம் இருப்பதாகவும் இதனால் மீன்களை வாங்குவதற்கு மக்கள் தயங்குவதாகவும்
தெரிவித்த மீன் வியாபாரிகள், இந்நிலையானது தமது வியாபாரத்தில் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.
கல்முனைக்குடி மீன்சந்தையின் சுற்றுப்புறச் சூழல் குறித்தும், அதனை சீர்படுத்தித் தருமாறும் கல்முனை மாநகரசபையினரிடம் தாம் பலமுறை வேண்டுகோள் விடுத்திருந்தபோதிலும், இதுவரை எதுவித நடவடிக்கைளும் மேற்கொள்ளப்படவில்லை என்று பொதுமக்கள் கூறியுள்ளனர்.
மேற்படி குப்பைகள் மற்றும் அசுத்த நீர் பரவிக் கிடக்கும் சூழலில் கல்முனைக்குடி ஜும்ஆப் பள்ளிவாசல் மற்றும் இறக்கக் கண்டி சுனாமி வீட்டுத் திட்டம் அமைந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
34 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago