Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 நவம்பர் 10 , மு.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
அக்கரைப்பற்று பிரதேசத்தில் கையடக்க தொலைபேசிகளில் ஆபாசப்படங்களை தரவேற்றம் செய்து கொடுக்கும் நிலையமொன்றை அம்பாறை குற்றத்தடுப்பு பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை முற்றுகையிட்டுள்ளனர்.
அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் அமைந்துள்ள கணினிக் கடையொன்றில் இவ்வாறு கையடக்க தொலைபேசிகளில் ஆபாசப்படங்களை தரவேற்றம் செய்து கொடுப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அம்பாறையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட ஒருவரின் கையடக்க தொலைபேசியில் இவ்வாறான ஆபாசப்படங்கள் காணப்பட்டதையடுத்து அக்கரைப்பற்றில் சுற்றிவளைப்பு தெரிவிக்கப்படுகிறது.
அம்பாறை பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரேமலால் ரணகலவின் பணிப்புரையின் பேரில், பிரதேச குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பிரியந்த பண்டார மற்றும் உதவி பொலிஸ் பரிசோதகர் கஜநாயக, பொலிஸ் உத்தியோகத்தர் சுஜீவ ஜயசிங்க ஆகியோர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைதுசெய்யயப்பட்டதுடன் நிலையத்தில் இருந்த கணினி, பிரிண்டர், சீடி உட்பட பல பொருட்களும் கைப்பற்றப்பட்டன.
இவ்விடயம் சம்பந்தமாக அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
34 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago