Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 நவம்பர் 10 , மு.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட், அப்துல் அஸீஸ்)
மனித பாவனைக்கு உதவாத, காலாவதியான உணவுப் பொருட்களையும், உணவுச் சட்டத்துக்கு ஒவ்வாத முறையில் சுட்டுத் துண்டுகள் இடப்படாத உணவுகளையும் விற்பனைக்காக வைத்திருந்த ஆறு நபர்களுக்கு இன்று புதன்கிழமை கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.எம். றிஸ்வி தலா 5 ஆயிரம் ரூபா வீதம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் பொதுச் சுகாதார பரிசோதகர்களும், கல்முனை பொலிஸாரும் இணைந்து இன்று புதன்கிழமை கல்முனை நகரத்திலுள்ள உணவகங்கள் மற்றும் உணவுப் பொருள் விற்பனை நிலையங்களில் தேடுதல் நடவடிக்கையொன்றில் ஈடுபட்டபோதே மேற்படி ஆறு நபர்களுக்கும் எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நடவடிக்கையின் போது, மனித பாவனைக்கு உதவாத, காலாவதியான உணவுப் பொருட்களும், உணவுச் சட்டத்துக்கு ஒவ்வாத முறையில் சுட்டுத் துண்டுகள் இடப்படாத உணவுகளும் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டதோடு, அவ்வாறான பொருட்களை எதிர்காலத்தில் விற்பனைக்காக வைத்திருக்கக் கூடாது என சம்பந்தப்பட்டோரை பொதுச் சுகாதார அதிகாரிகள் எச்சரித்தனர்.
கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் மேற்பார்வை பொசுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல். கலீல் தலைமையில் இடம்பெற்ற இந்நடவடிக்கையில் - பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களான நியாஸ் எம்.அப்பாஸ், ஏ.எம்.பாறூக், ஏ.எல்.நிஜாமுத்தீன் உள்ளிட்ட குழுவினரும், கல்முனை பொலிஸ் நிலைய பரிசோதகர் வீரசேன தலைமையிலான பொலிஸ் குழுவினரும் கலந்து கொண்டனர்.
42 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
1 hours ago