2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

கிழக்கில் திராட்சை உற்பத்தி செய்ய தீர்மானம்

Menaka Mookandi   / 2010 நவம்பர் 12 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எம்.ஜெஸ்மின்)

கிழக்கு மாகாணத்தில் நெற்பயிர்ச் செய்கையை மேற்கொள்ள முடியாத மேட்டு நிலங்களில் திராட்சையை உற்பத்தி செய்ய விவசாய அபிலிருத்தி மற்றும் கமநலசேவை அமைச்சு திட்டமிட்டுள்ளது.

திராட்சை உற்பத்தியில் விவசாயிகள் காட்டும் அக்கறை அதிகமாக இருக்கின்ற நிலையில் எமது நாட்டின் மக்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக வருடாந்தம் 500 மில்லியன் ரூபாவினை திராட்சைப் பழங்களை இறக்குமதி செய்வதற்காக அரசாங்கம் செலவிடுகின்றது.

இதனால் எமது நாட்டு மக்களுக்கு தேவையான திராட்சைப் பழங்களை எமது நாட்டில் உற்பத்தி செய்வதற்காகவே இத்திட்டம் முதலில் அம்பாறை மாவட்டத்தில் அமுல் படுத்தப்படவுள்ளதாக அம்பாறை மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் நிமல் தயாரெட்ன தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .