Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2010 நவம்பர் 28 , மு.ப. 08:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
கல்முனை மாநகரசபையின் கணக்காளராகிய தனது அலுவலக அறையினை அச்சபையின் மேயர் உள்ளிட்ட குழுவினர் பூட்டி, சீல் வைத்துள்ளமையானது – தொழில் ரீதியாக தனக்கு அபகீர்த்தியினை ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும் என்றும் அவர்களின் ஊழல் மோசடிகளுக்குத் துணைபோகாததற்காகவே தான் இவ்வாறு அவர்களால் பழிவாங்கப்பட்டுள்ளதாகவும் - குறித்த மாநகரசபையின் கணக்காளர் ஏ.ஆர்.நஸீமுல் ஹக் தெரிவித்தார்.
கல்முனை கணக்காளர் அலுவலகம் 'சீல்' வைக்கப்பட்டமை மற்றும் இது குறித்து அச்சபையின் மேயர் எஸ்.இஸட்.எம்.மசூர் மௌலானா தெரிவித்துள்ள கருத்துகள் குறித்து - கணக்காளர் நஸீமுல் ஹக்கிடம் கேட்டபோதே, அவர் மேற்கண்ட பதிலைத் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்:
கல்முனை மாநகரசபையில் - அரசியல் நிர்வாகம், ஊழியர் நிர்வாகத்தில் கூடுதலாகத் தலையிடுவதற்கு முயற்சிக்கின்றது. இதன் விளைவாகத்தான் இவ்வாறான நெருக்கடிகள் அங்குள்ள உத்தியோகத்தர்களுக்கு ஏற்படுகின்றது.
அண்மையில் பெய்த மழையால் என்னுடைய அலுவலக அறையில் நீர் ஒழுகி துர்நாற்றம் வீசிக் கொண்டிருந்தது. இது குறித்து மேயருக்கும் ஆணையாளருக்கும் நான் எழுத்து மூலம் அறிவித்திருந்தேன். எனது அறையை சுத்தம்செய்து தரும்வரை அங்கிருந்து வேலை செய்ய முடியாது என்றும் தெரிவித்திருந்தேன். ஆனால், அதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.
ஆனாலும், கடந்த 25ஆம் திகதி ஊழியர்களுக்கான சம்பள நாள் என்பதால், என்னுடைய அறையிலிருந்து வேலை செய்ய முடியாதபோதும் கூட, ஓர் எழுதுவினைஞரின் இடத்தில் இருந்து கொண்டு சம்பளத்தை வழங்குவதற்குரிய வேலைகளைச் செய்தேன்.
இந்தவேளையில்தான் மாநகரசபை மேயர் என்னை கூப்பிட்டிருந்தார். அப்போது மதிய உணவுக்கான நேரம் ஆகிவிட்டிருந்தபடியால், சாப்பாட்டை எடுத்துவிட்டு வரலாம் என்றெண்ணி, வெளியில் சென்று – திரும்பி வந்து பார்த்தபோது எனது அறை பூட்டி 'சீல்' வைக்கப்பட்டிருந்தது.
இதற்கு 25ஆம் திகதி நடந்த அந்த நிகழ்வு காரணமல்ல. முன்னர் பல சம்பவங்கள் அங்கு நடைபெற்றுள்ளன. அந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து – திட்டமிட்ட ரீதியில் என்னைப் பழிவாங்குவதற்காகவே இவ்வாறு செய்துள்ளார்கள் என நான் கருதுகின்றேன்.
கல்முனை மாநகரசபையில் தீர்மானங்களை அவர்களே எடுத்து, அவர்களே அவற்றினை நிறைவேற்றவும் முயற்சிக்கின்றனர். இவ்வாறான சந்தர்ப்பங்களில்தான் அங்கு பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
அங்குள்ள அரசியல்வாதிகள் எந்தளவுக்கு ஊழல் மோடிகளில் ஈடுபடலாமோ அந்தளவுக்கு ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். நிதிப் பிரமாணங்களுக்கு முரணானவகையில் செயற்படுமாறு அவர்கள் என்னை வற்புறுத்துகின்றார்கள். நான் மறுக்கும்போது என்மீது கோபம் கொள்கிறார்கள்.
மாநகர முதல்வர், மாநகரசபையின் நிதியினைப் பயன்படுத்தி அவருடைய வீட்டுக்கு குளிர்சாதனப் பெட்டி வாங்கியிருக்கின்றார். மாநகரசபைக்கு சொந்தமான தொலைக்காட்சிப் பெட்டியினை அவருடைய வீட்டில் வைத்துப் பயன்படுத்துகின்றார். அண்மையில் அவருடைய வீட்டுக்கு வர்ணம் (பெயின்ற்) பூசிய காசையும் மாநகரசபைக் கணக்கிலிருந்து எடுத்திருக்கின்றார்.
மாநகர முதல்வர் என்பவர் மாநகரசபைக்கும் ஊழியர்களுக்குமிடையில் தொடர்பினை ஏற்படுத்துபவராக இருக்க வேண்டும். ஆனால், இந்தக் கடமையை முதல்வர் செய்வதற்குத் தவறி விட்டார்.
21 minute ago
34 minute ago
35 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
34 minute ago
35 minute ago
40 minute ago