Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 டிசெம்பர் 03 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சி.அன்சார்)
பலஸ்தீன ஒருமைப்பாட்டு தினத்தினை முன்னிட்டு சோஷலிச இளைஞர் முன்னணியின் ஏற்பாட்டில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஏகாதிபத்திய நாடுகள் பலஸ்தீன மக்களுக்கு எதிராக மேற்கொள்ளும் கொடூர தாக்குதலை நிறுத்தக்கோரி "பலஸ்தீனத்தில் கை வைக்காதே" எனும் மக்கள் எதிர்ப்பு பேரணி இன்று வெள்ளிக்கிழமை சம்மாந்துறை நகரில் இடம்பெற்றது.
இன்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையின் பின்னர் ஹிஜ்ரா சந்தியில் ஒன்றுகூடிய "மக்கள் பலஸ்தீனம் வாழ்வதற்கு வழி விடு, நிறுத்து! நிறுத்து! உனது துவக்கு வெடிகளையும், எறிகனை வீச்சுக்களையும் நாம் வாழ வழி விடு, இறக்கமில்லா இஸ்ரேலே நாம் வாழ வழி விடு, பஞ்கம் பிழைக்க வந்தவன் சுகம் அனுபவிக்கிறான் பலஸ்தீனம் வாழ வழிவ விடு, உலகிலே இடமில்லா யூதக் கொடியவனே உனக்கென்றொரு தேசம் இஸ்ரேல் என்பதனை நாம் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளவில்லையே, நாம் வாழ வழி விடு, உகல ஏகாதிபத்தியமே எங்கே உனது சமாதானம், ஒபாமாவே எங்கே உனது சமாதானம" என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு மக்கள் கோசம் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் திகாமடுல்ல மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த பியதிஸ்ஸ, மக்கள் விடுதலை முன்னணியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளர் எம்.எஸ்.எம். புகாரி உள்ளிட்ட பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.
1 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago