A.P.Mathan / 2010 டிசெம்பர் 30 , பி.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஹனீக் அஹமட்)
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோர் தொடர்பில் பிரதேச செயலாளர்கள் கவனம் செலுத்தி வரும் நிலையில், கல்முனை முஸ்லிம் பிரிவு பிரதேச செயலாளரின் வீடும் வெள்ளப் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
இதனையடுத்து, கல்முனை மாநகரசபைக்குட்பட்ட பிரதேசங்களில் வெள்ளப் பாதிப்புகளை இன்று பார்வையிடுவதற்காக வந்திருந்த அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கர, கல்முனை முஸ்லிம் பிரிவின் பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபலின் வீட்டினையும் பார்வையிட்டார்.
இதேவேளை, கல்முனை மாநகரசபைக்குட்பட்ட கல்முனை முஸ்லிம் பிரதேச செயலாளர் பிரிவில் 5,000 குடும்பங்களும், கல்முனை தமிழ் பிரதேச செயலாளர் பிரிவில் 5,300 குடும்பங்களும், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவில் 4,800 குடும்பங்களும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
.jpg)
.jpg)
14 minute ago
27 minute ago
36 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
27 minute ago
36 minute ago
43 minute ago