A.P.Mathan / 2011 ஜனவரி 27 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஹனீக் அஹமட்)
அம்பாறை மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு மு.கா. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தெரிவு செய்யும் நடவடிக்கையில் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் நேற்று நள்ளிரவு முதல் அதிகாலைவரை ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அங்கு கூடியிருந்த ஆதரவாளர்களிடையே கைகலப்புகளும் வன்முறைச் சம்பவங்களும் இடம்பெற்றன.
துறைமுக அதிகார சபைக்குக் சொந்தமான ஒலுவில் கட்டிட வளாகத்தில் மேற்படி தெரிவு நடவடிக்கை இடம்பெற்றது. இதன்போது வேட்பாளர் ஆசனங்களைப் பெறும்பொருட்டு அங்கு திரண்டிருந்தவர்களின் ஆதரவாளர்கள் சிலர் வன்முறையில் ஈடுபட்டனர்.
குறிப்பாக, பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த மு.கா. ஆதரவாளர் குழுக்கள் இரண்டினிடையே ஏற்பட்ட வாக்குவாதம் இறுதியில் மிக மோசமான கைகலப்பாக மாறியது.
இதேவேளை, அங்கு கூடியிருந்த மற்றுமொரு குழுவினர் - அவர்களின் ஊர் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் தொடர்பில் அதிருப்தி கொண்டதையடுத்து அங்கிருந்த கதவு மற்றும் கண்ணாடிகளை உடைத்தனர்.
ஏற்கனவே, அம்பாறை மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி சபைகளுக்குரிய வேட்பாளர்களுக்கான நேர்முகத் தேர்வுகள், நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் பைசால் காசிம் ஆகியோரின் தலைமையில் நடந்து முடிந்த நிலையிலேயே, மு.கா. தலைவர் மீண்டும் இந்தத் தேர்வினை நடத்தினார்.
இன்று அதிகாலை 3.00 மணியளவிலேயே வேட்பாளர்கள் குறித்த இறுதித் தீர்மானங்கள் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
29 minute ago
40 minute ago
44 minute ago
56 minute ago
Izaam Friday, 28 January 2011 01:58 AM
முஸ்லிம்களை ஒற்றுமைப்படுத்த வேண்டியது முஸ்லிம் காங்கிரசின் கடமை. தற்போது இவர்கள் பதவி மோகம் பிடித்து அலைகிரார்கள்.
Reply : 0 0
siyam Friday, 28 January 2011 12:39 PM
முஸ்லிம் சமூகத்திற்கு அழகு சேர்த்திருக்கிறார்கள்.
Reply : 0 0
S.Athem Bhawa, Oluvil Saturday, 29 January 2011 12:43 AM
சமூகத்தில் களையப்பட வேண்டியவர்கள் இருக்கிறார்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
40 minute ago
44 minute ago
56 minute ago