Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஜனவரி 29 , பி.ப. 01:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
தம்பிலுவில் பிரதேச வீடொன்றிலிருந்து நேற்று வெள்ளிக்கிழமை 150,000 ரூபா பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்ட ஓருவரை இன்று சனிக்கிழமை கைது செய்ததுடன் கொள்ளையிட்ட தங்க ஆபரணங்களையும் மீட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஈ.வி.சமிந்த தெரிவித்தார்.
திருக்கோவில் பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள தம்பிலுவில் ஆதவன் விளையாட்டு மைதானத்தின் முன்னாள் உள்ள வீடு ஒன்றில் நேற்று வெள்ளிக்கிழமை புகுந்து 4 பவுண் நிறை கொண்ட தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு சென்றுள்ளார்.
சம்பவம் தொடாபாக தம்பிலுவில் பிரதேசத்தை சேர்ந்த 25 வயதான இளைஞரொருவரை இன்று பகல் 2 மணியளவில் கைது செய்துள்ளதுடன் கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஈ.வி.சமிந்த தெரிவித்தார்.
குறித்த சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
7 minute ago
13 minute ago
13 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
13 minute ago
13 minute ago