Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 மே 21 , மு.ப. 08:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சி.அன்சார்)
'சமாதானம், ஒற்றுமை, பாதுகாப்புடனான அபிவிருத்தியை நோக்கி அணிதிரள்வோம் (பாதுகாப்பான இலங்கை)' என்ற தொனிப்பொருளில் சம்மாந்துறை பொலிஸ் பிரிவினால் ஏற்படுத்தப்பட்ட நடமாடும் சேவை இன்று சனிக்கிழமை நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இடம்பெற்றது.
சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜயந்த தஹனக தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா, உதவிச் செயலாளர் திருமதி திருச்செல்வம், சம்மாந்துறை பொலிஸ் நிலைய சமூகப் பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.எம்.அமீர், நிந்தவூர் மத்தியஸ்தர் குழுவின் தவிசாளர் ஏ.ஜமால்தீன் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உட்பட பொது மக்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது பிறப்பு. இறப்பு மற்றும் விவாகப் பதிவு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், காலதாமான அடையாள அட்டை, கடவுச்சீட்டு மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் என்பன பெற்றுக்கொடுப்பதற்கு வழவகைகள் செய்யப்பட்டன.
மேலும் வாகனப்பதிவுகள் மற்றும் பொலிஸ் சான்றிதழ்கள் என்பனவும் வழங்கப்பட்டதுடன், சிறுவர் துஷ்பிரயோகம், போக்குவரத்து விதிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு சட்ட ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
இலவச வைத்தியமுகாம் மற்றும் மத்தியஸ்தம் என்பனவும் நடைபெற்றன.
3 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago