2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

தம்பிலுவில் பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு

Menaka Mookandi   / 2011 மே 26 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

தம்பிலுவில் பிரதேசத்தில் கமநல காப்புறுதி சபை ஊடாக கடன் பெற்று விவசாயத்தில் ஈடுபட்ட போது, கடந்த வெள்ளத்தினால் நஷ்டமடைந்த விவசாயிகளுக்கான நஷ்ட ஈட்டுக் காசோலைகளை இலங்கை வங்கியூடாக வழங்கும் நிகழ்வு நேற்று விநாயகபுரம் பல்தேவைக் கட்டிடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் போது திருக்கோவில் இலங்கை வங்கி முகாமையாளர் எம்.ஐ.சபூரிடமிருந்து நஷ்ட ஈட்டுக் காசோலைகளை கமநல வெளிக்கள உத்தியோகத்தர் கே.எம்.அன்சார் பெற்று, அவற்றினை பயனாளிகளுக்கு வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டு தமக்கான நஷ்ட ஈட்டுக் காசோலைகளைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .