2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

ஹிங்குரானையில் மென் வேலைத்திட்டம்

Menaka Mookandi   / 2011 மே 27 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

தமண பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஹிங்குரான - கரல்லவ பகுதியில் சுமார் 35 வருடங்களாகக் காடு பிடித்துப் போயிருந்த இடமொன்றை அப்பிரதேச மக்கள் உலக உணவுத் திட்டத்தின் 10 நாட்களைக் கொண்ட மென் வேலைத் திட்டத்தின்கீழ் சுத்தப்படுத்தி, அங்கு தென்னை மற்றும் பலா மரக் கன்றுகளை நட்டு அப்பகுதியை நேற்று அழகுபடுத்தினர்.

இந்நிகழ்வில் தமண பிரதேச செயலாளர் சுபாசினி குலதுங்க, உலக உணவுத் திட்டத்தின் அம்பாறை மாவட்டப் பிராந்தியக் காரியாலயத்தின் தலைவி செனப் ஹெபிட்டி, ஹிங்குரான உத்தர ஜய மகா விகாராதிபதி ஹிங்குரான ஸ்ரீதம்ம ஹிமி உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.

உலக உணவுத் திட்டத்தின் இது போன்ற 16 மென் வேலைத்திட்டங்கள் இடம்பெறுவதாகவும், நேற்று கரல்லவ பகுதியில் இடம்பெற்ற மென் வேலைத்திட்டத்தின் மூலம் 625 பொதுமக்கள் உலக உணவுத் திட்டத்தினால் வழங்கப்பட்ட உணவுகளைப் பெற்றுப் பயனடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .